Meal provision for special-needs children - 2020 Sri Lanka
அல்லையூர் அறப்பணிக் குடும்பத்தினரின் 1000வது தடவையாக, முன்னெடுக்கப்பட்டு வரும் சிறப்பு அன்னதானப் பணி!
டென்மார்க்கில் காலமான, தீவகம் வேலணையைச் சேர்ந்த, அமரர் கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா அவர்களின் 2ம் ஆண்டு நினைவாக,இன்று 24.08.2020 திங்கட்கிழமை, அல்லையூர் அறப்பணி குடும்பத்தினரின் ஏற்பாட்டில், பொன்மணி அறக்கட்டளை (டென்மார்க்)நிதி அனுசரணையில், கிளிநொச்சி மலையாளபுரத்தில் அமைந்துள்ள விசேட தேவைக்குட்பட்ட வலையமைப்பு இல்லத்தில் வசிக்கும்,தெய்வக் குழந்தைகளுக்கு
முழுநாள் சிறப்புணவு வழங்கப்பட்டது.
அமரர் வேலணையூர் பொன்னண்ணா அவர்களின் ஆத்மா சாந்தியடைய, எல்லாம் வல்ல வேலணை பெருங்குளம் முத்துமாரி அம்மனை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி...