Ponnanna’s Story

வாழ்நாள்

சாதனையாளர்,

நிறைதமிழ்   

   கவிஞர்,

      திரு.

வேலணையூர் பொன்னண்ணா

“என்னை நன்றாக இறைவன் படைத்தனன்

தன்னை நன்றாக தமிழ் செய்யும்மாறே”

இலங்கை திருநாட்டின் வடபாகத்தே யாழ்மாவட்டத்தில் ஊர்காவற்துறை தொகுதியில் வேலணை என்னும் ஊரில் பிறந்த கோமான் திரு. பொன்னண்ணா அவர்கள். ஆன்மீகத்திலும் தமிழிலும் மிகுந்த பற்றுக்கொண்டவர்கள்.

 

நாட்டின் சூழ்நிலை கருதி பிரான்சிற்கும் பின்னர் டென்மார்க்கிற்கும் புலம்

பெயர்ந்தவர்.

 

 தமிழ் மீதுள்ள பற்றாலும் தமிழ் தாயகத்தின் மீதுள்ள பற்றாலும் பல கவிதை தொகுப்புக்களையும் அருளமுதம் என்ற ஆவணதொகுப்பையும் வெளியிட்டு புலம்பெயர் தமிழர்களதும் ஈழ தமிழர்களதும் அபிமானத்தையும்

பாராட்டையும் பெற்றவர்.

 

பொன்னண்ணா அவர்கள் தமிழ்ப்பண்பாட்டை வாயளவில் பேசுவது மாத்திரமில்லாமல் வாழ்க்கையிலும் கடைப்பிடித்தவர். அவர் வாழ்க்கையே கவிதையானது என்று கூறினால் அது மிகையாகாது. சைவம் அவரது உயிர். டென்மார்க்கில்

சைவப்பெருமக்கள் ஈமக்கிரிகைகள் செயவாரில்லாது கஷ்டப்பட்ட போது சைவத்தமிழ் பண்பாட்டு பேரவை என்ற அமைப்பினை உருவாக்கி அவ்வமைப்பின் தலைவராக

பணியாற்றி வருவதோடு மட்டுமல்லாது அந்த அமைப்பின் உறுப்பினர்களுடன் சேர்ந்து பல ஈமக்கிரிகைகளை நடத்தி சைவப்பெருமக்களுக்கு பெரும் சேவையாற்றி வருகின்ற பண்பாளர்.

 

 அப்பெருந்தகையின் நிலமாகி, வெந்தவனம், அபிராமி அம்மன் பஜனைப்பாடல், பிள்ளையார் பக்தி பஜனைப்பாடல்கள். பச்சை இறகு, உளிகள். அருளமுதம்.

முத்துமாரியம்மன் பாடல்கள். நெஞ்சத்து நெருப்பு போன்ற நூல் வரிசைகளிலே அவரது பனிமலை கடந்த பாதச்சுவடுகள் என்ற அவரது வாழ்க்கை வரலாறு பத்தாவது

நூலாக வெளிவருவதில் மிகவும் புளகாங்கிதமடைகிறேன். அத்துடன் அவரது இலக்கியப்பணி, சிவப்பணி மேலும் வளர, தலைமுறை தலைமுறையாக பொன்னண்ணா   பெயர் சிறக்க பணியாற்றியவர்.