Exam papers 2020 Sri Lanka

26 July 2020

தாயகத்தில் கொரோனா இடர் கால விடுமுறையில் மாணவர்கள் தங்கள் கல்விச் செயற்பாடுகளை தடையின்றி மேற்கொள்வதற்கு, சமயம் மற்றும் தமிழ் கற்றல் கையேடுகளைத் தயாரித்து வழங்கத் தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.த.கிருபாகரன் அவர்களால் கோரப்பட்ட நிதியுதவியை டென்மார்க் பொன்மணி அறக்கட்டளையூடாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிதி உதவியூடாக தரம் 06 இருந்து தரம் 13 வரை தென்மராட்சி வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட 4990 மாணவ மாணவிகள் பயனடைந்துள்ளார்கள் என்பதில் பொன்மணி அறக்கட்டளை நிறுவனம் மன மகிழ்ச்சி அடைவதுடன், தொடர்ந்து இவ்வாறான பணிகளையும் முன்னெடுக்க இச் செயற்பாடு உந்துசக்தியாக அமைகின்றது.

Previous
Previous

Meal provision for elderly - 2020 Sri Lanka

Next
Next

School Equipment 2019 Sri Lanka