Poetry Contest 2019 Sri Lanka
கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா ஞாபகார்த்த "" பொன்மணி ஆளுமை விருது " பெற்ற பொன்னான தருணம் ,,,
முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ந, சண்முகலிங்கன் தமிழ்நாடு சேலம் பிரபல சொற்பொழிவாளர் சங்கர் நாராயணன் பொன் கலைவேந்தன் உள்ளிட்ட பேராளர்கள் சபையில் இந்தக் கௌரவம் பெற்றமை இரட்டிப்பு மகிழ்ச்சி
கவிஞர் வேலணையூர் தாஸ் கவிஞர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் ஆகியோருக்கும் இவ்விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
நன்றி
பொன்மணி அறக்கட்டளை டென்மார்க்
பொன்மணி அறக்கட்டளையின் பெரும்பணிக்கென் சிரம்தாழ்ந்த நன்றிப் பதிவு...
வேலணையூர் பெற்றெடுத்த கவிப்பெருமகன் கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா.
அன்றும் இன்றும் என்றும் அந்தப் பகலவனைப் போன்று கவிஞரின் அருமை பெருமைகள் பிரகாசித்துக் கொண்டுதான் இருக்கும். அதற்கு ஒரு சான்றாக அவரின் கனவுகளையெல்லாம் நனவாக்கி வரும் அவரது குடும்பத்தினரின் அயராத உழைப்பின் வெளிப்பாடான பொன்மணி அறக்கட்டளை (டென்மார்க்) ஊடான மகத்தான பெரும் பணிதனைக் குறிப்பிடலாம்.
அளப்பரிய அப்பணிதனில் சிலவற்றைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். சென்ற ஆண்டு தீவக வலயத்தால் தெரிவு செய்யப்பட்ட வறிய மாணவர்களுக்கான பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கியிருந்தார்கள், அத்தோடு தீவக வலயத்திற்கு உட்பட்ட பல்துறைக் கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு துறை சார்ந்தும் நினைவுப் பரிசில்கள் வழங்கிக் கௌரவித்திருந்தார்கள், மேலும் இலங்கை முழுவதுமாக கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா ஞாபகார்த்த கவிதைப் போட்டியை நடார்த்தி அதில் வெற்றி பெற்றோருக்கு உயர் பணப்பரிசுகள், ஆறுதற் பரிசுகள் என்று வழங்கி கவிஞர்களை ஊக்குவித்திருந்தார்கள்.
இவ்வாறான உன்னத பணியில் எனது கவிதைப் பயணத்திற்கும் உறுதுணை புரிந்திருக்கிறார்கள். ஆம் எனது முதற் படைப்புக்களான பொற்கனவு, நிலா நாழிகை ஆகிய நூல்களில் ஒவ்வொன்றிலும் ஐம்பது, ஐம்பது நூல்களைக் கொள்வனவு செய்து தென்மராட்சி வலயப் பாடசாலைகளின் நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கி எனது எழுத்துக்களுக்கும் மகுடம் சூட்டியிருக்கிறார்கள் வளர்ந்து வரும் இளைய படைப்பாளனுக்கு இதைவிட வேறு என்ன அங்கீகாரம் வேண்டும். உண்மையில் இத்தகையதொரு பேராதரவை என் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் என்றும் நன்றியோடு சுமந்திருக்கும்.
கவிஞர் வேலணையூர் பொன்னண்ணாவிற்கும், அவரது குடும்பத்தினர்க்கும், பொன்மணி அறக்கட்டளை (டென்மார்க்) அமைப்பிற்கும் ஆத்மார்த்த பேரன்பும் நன்றியும் உரித்தாகட்டும்.
வேலணையூர் என் பெயரோடு மட்டுமன்றி பெரியோரின் ஆசிகளாகவும் ஆதரவாகவும் கலந்திருப்பது என் பெரும்பேறாகவே கருதுகிறேன்.
-நன்றியுடன்-
14.05.2020